புகையிரத பெட்டிகள் வர்த்தக நோக்கத்திற்காக வழங்கப்படவுள்ளது - அமைச்சர் பந்துல குணவர்தன
#Train
#MetroTrain
#Bandula Gunawardana
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான புகையிரத பெட்டிகள் வர்த்தக நோக்கத்திற்காக வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) அவர் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பயன்படுத்தப்படாமல் குவிக்கப்பட்டிருந்த பல புகையிரதப் பெட்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



