வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்குவது தொடர்பில் தீர்மானம்
#Salary
#government
#Bandula Gunawardana
#Election
#Lanka4
#SriLanka
#sri lanka tamil news
Prathees
2 years ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு மார்ச் 9ஆம் திகதி முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கான அடிப்படை சம்பளத்தை வழங்க அமைச்சர்கள் சபை தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அடிப்படை சம்பளம் மட்டுமன்றி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முழு சம்பளமும் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல, ரஞ்சித் மத்தும பண்டார, ஹர்ஷன ராஜகருணா மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர ஆகியோருக்கு இடையில் உரையாடல் இடம்பெற்றது.



