இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

#SriLanka #Sri Lanka President #Fuel #Festival #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (4) நள்ளிரவு முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புக்களை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்பதிவுசெய்து பெற்றுக் கொண்டுள்ளது.

எனவே, எவ்வித சிரமமும் இன்றி இந்த தீர்மானத்தை அமல்படுத்த முடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றரிலிருந்து 8 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றரிலிருந்து 7 லீற்றராகவும்,

பேருந்துகளுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், கார்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும்,

பாரவூர்திகளுக்கு 50 லீற்றரிலிருந்து 25 லீற்றராகவும், சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும் வேன்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!