பொறிக்கடவை ஆலயத்தில் குழு மோதல் மக்கள் பதற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் குஞ்சுப்பரந்தன் என்ற இடத்தில் இருக்கின்ற பொறிக்கடவை என்ற ஆலயத்தில் வருடா வருடம் பங்குனித்திங்கள் திருவிழா நடப்பது வழக்கம் அங்கே வெளிவியும் நடைபெறுவது வழக்கம் அதை பெரிய பரந்தன் குஞ்சுப்பரந்தன் மக்கள் அந்த பங்குனி திங்கள் ஆரம்பகாலத்தில் இருந்து விரதம் இருந்து பங்குனித்திங்களை கொண்டாடுவது வழக்கம்
அங்கே பலவகை உணவுகள் சமைத்து நீர்ச்சோறு வழங்குவது வழக்கம்
அந்த நீர் சோறு சாப்பிடுவதற்காகவே கிளிநொச்சி சாவச்சேரி மீசாலை மக்கள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் அங்கே விசேடமாக கிளிநொச்சி குமாரபுரம் கந்தசாமி கோவிலில் இருந்து காவடி
பெண்கள் பால்சேம்பு எடுத்தல் என்பன நடைபெறும் அத்தோடு நேற்றைய தினம் பங்குனித்திங்கள் முடிவில் விமர்சையாக கொண்டாடப்பட்ட்து அவ்வேளை அங்கே பலருடைய கவலைக்குரிய விடயம் நடந்தது அங்கே வந்த இளைஞர்கள் போதைவஸ்து பாவித்தவர்களாக காணப்படடார்கள் அது மக்களின் விசனத்துக்கு உள்ளாக்கியுள்ளது இதனால் பலவகையான மக்கள் அங்கே செல்ல அஞ்சுகிறார்கள் அத்தோடு 2 குழு மோதலும் நடைபெற்றிருக்கிறது இருந்தாலும் கோவிலில் இதனை கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்ட்து
இது மட்டுமில்லாமல் இதைப்போல பலகோவில்களில் இது நடைபெறுகிறது போதை பாவனையாளர்களாலும் போதைவஸ்து வியாபாரிகளாலும் பெண்பிள்ளைகளை கோவிலுக்கு அழைத்து செல்வத்தையும் குறைத்துள்ளார்கள் இது தொடர்ந்து நீடிக்குமா இருந்தால் இலங்கையில் வெறும் ரவுடி கும்பல்களும் குத்துவெட்டுக்க்காரர்களும் தான் கோவிலுக்கு பரவலாக செல்லமுடியும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துக்கள்ளர்கள் இதை lanka 4 ஊடகவியலாளர் நேரடியாக பார்த்து இந்த செய்தியை நாம் பதிவுகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது



