வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியாது! சங்கத் தலைவர் திட்டவட்டம்

#SriLanka #Litro Gas #Laugfs gas #prices #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியாது!  சங்கத் தலைவர் திட்டவட்டம்

எரிவாயு விலை குறைக்கப்பட்டதால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியாதென அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என். கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

சுமார் 75% வெதுப்பக உற்பத்திகளுக்காக டீசல், விறகு மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

மொத்தமாக சுமார் ஏழாயிரம் 7000 வெதுப்பகங்களில் 2000 இற்கும் குறைவான வெதுப்பகங்களே எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன.

டொலரின் பெறுமதி மேலும் குறைந்து,  கோதுமை மா, முட்டை, மாஜரின் விலைகள் குறைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் பேக்கரி உற்பத்திகளின் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!