மூன்றாவது பங்குனித்திங்கள் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய உற்சவத்தின் திருக்கையிலாச வாகன உற்சவம்

#Temple #spiritual #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
மூன்றாவது பங்குனித்திங்கள் மட்டுவில்  பன்றித்தலைச்சி அம்மன் ஆலய உற்சவத்தின் திருக்கையிலாச வாகன உற்சவம்

மூன்றாவது பங்குனித்திங்கள் மாதஉற்சவத்தின் திருக்கையிலாச வாகன உற்சவம் 03.04.2023 அன்று இரவு வரலாற்று சிறப்புமிக்க யாழ் மட்டுவில்  பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் பற்றித்தலையம்மனுக்கும், வசந்தமண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேசக ஆராதனை என்பன இடம்பெற்றன. பின்னர் திருக்கையிலாச வாகனத்தில் எம்பெருமான் சமேதராக உள் வீதி மற்றும் வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இவ் உற்சவம் கிரியைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள் தலைமையிலான குருக்கள் நடாத்திவைத்தனர்.

கடந்த 20.03.2023 அன்று முதலாவது பங்குனி திங்கள் உற்சவம்  ஆரம்பமாகி, 27.03.2023 அன்று  இரண்டாவது பங்குனித் திங்கள் 03.04.2023 மூன்றாவது பங்குனி திங்கள் உற்சவமும் நடைபெற்று, எதிர்வரும் 10.04.2023 அன்று நான்காவது உற்சவத்துடன் இனிதே நிறைவடையும்.

இதில் கலந்துகொண்ட பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொண்டனர். யாழ். குடா நாட்டில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களிலும் விஷேட பூஜைகள் இடம்பெற்றுவருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!