பூகம்பங்கள் தொடர்பில் கொழும்பில் அதிக கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்
#Earthquake
#Colombo
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Prathees
2 years ago

புதிய பூகம்ப பரிசோதனை கருவிகளை நிறுவி கொழும்பை சுற்றி ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து உடனடி கவனம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பை அண்மித்த பகுதிகளில் ஏற்படக்கூடிய பாரதூரமான அதிர்வுகள் தொடர்பில் கணிப்புகளை மேற்கொள்வதன் மூலம் ஆபத்து நிலைகளைத் தவிர்க்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பயப்பட வேண்டிய சூழ்நிலை இல்லை எனவும், அதனை ஆராய்வதே முக்கியம் எனவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.



