இலங்கை இந்திய மீனவர் பிரச்சனைக்கு கச்சதீவில் பேச்சுவார்த்தை!
#SriLanka
#India
#kachchaitheevu
#Fisherman
#Fish
#Meeting
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

கச்சத்தீவில் இலங்கை இந்திய மீனவர்களிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இந்திய மீனவ பிரதிநிதிகள் தரப்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை மடியினை விடுத்து பிறதொழில்களுக்கு தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும் தமது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மீனவர்களை மனித உரிமைசார் அடிப்படையில் கூலிக்காக வருபவர்களை கைது செய்யாது விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதன் பொழுது இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவபிரதிநிகள் மற்றும் கட்சி சார் பிரதிநிகள் அமைச்சர் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.



