பணிப்புறக்கணிப்பு: மூடப்பட்ட பாராளுமன்றத்தில் உள்ள இலங்கை வங்கி! திண்டாடிய எம்பிக்கள்
#SriLanka
#Sri Lanka President
#Parliament
#Bank of Ceylon
#Bank
#People's Bank
#strike
#Lanka4
Mayoorikka
2 years ago

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பாராளுமன்றத்தின் இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டுள்ளதால், அதன் சேவையை பெறுபவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வங்கியின் இந்தக் கிளையிலிருந்து சேவையைப் பெறுகின்றனர்.
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கிக் கிளை மூடப்படும் எனத் துண்டுப் பிரசுரமும் காட்சிப்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டிருந்த போதிலும், நீர், மின்சாரம் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் ஏனைய சேவை அலுவலகங்கள் வழமை போன்று திறந்திருந்தன.



