பிரிட்டனுக்கான முதலீட்டு வாய்ப்புகளை விரிபுபடுத்த யாழ்ப்பாண தமிழரை நியமித்த அமைச்சர்!

இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பிரதிநிதிகளை நியமிக்கும் திட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதியாக கன்னையா கஜன் நியமிக்கப்பட்டார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.
இந்த நியமனம் இன்று (1) முதல் நடைமுறைக்கு வரும். எரிசக்தி, விவசாயம், நகர்ப்புற மேம்பாடு, கனிம வளங்கள் ஆகியவற்றிற்காக ஐக்கிய இராச்சியத்திலிருந்து முதலீட்டாளர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் வகிப்பார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கண்ணையா கஜன் பிரித்தானியாவில் வசிப்பவர். அவர் சஃபோல்க் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் பிரிட்டனில் பல வணிக நிறுவனர்களில் உரிமையாளராக உள்ளார்.
பிரிட்டனில் கிரேட் கேர் இன்டர்நேஷனலுக்கான திட்ட மேலாளராகவும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் பிரித்தானியாவில் உள்ள லோட்டஸ் வில்லேஜ் ஹோம் கேர் கம்பனியின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஆவார், இலங்கை முகவர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், உலகப் பொருளாதார சீவ்லோஸ்மென்ட் அமைப்பு மற்றும் இலங்கையின் உணவு நிறுவனத்தின் ஸ்தாபகராகவும் உள்ளார்.



