சீல் வைக்கப்பட்ட அலுவலகத்திற்குத் திரும்பிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானகவிற்கு கிடைத்த அவமானம்!
#SriLanka
#Sri Lanka President
#Department
#Election Commission
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago

வெளிநாட்டில் இருந்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க நேற்று (28) பிற்பகல் கொள்ளுப்பிட்டியில் சீல் வைக்கப்பட்ட அலுவலகத்திற்குத் திரும்பிய போதிலும், அலுவலகத்தை திறக்க பொலிஸார் வராததால் அவர் மிகவும் அவமானமடைந்துள்ளார்.
அவர் வெளிநாட்டில் இருந்த போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் அலுவலகம் கடந்த மாதம் 16 ஆம் திகதி சீல் வைக்கப்பட்டதுடன், அவர் நாடு திரும்பிய பின்னர் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், அலுவலகத்தை திறக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கடிதம் அனுப்பிய போதிலும் அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தினால் அதனை திறக்கவில்லை என ரத்நாயக்க தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.



