தாமதிக்காமல் உள்ளூராட்சி தேர்தலை நடத்துங்கள்: அமெரிக்க செனட் சபை இலங்கை அரசிடம் வேண்டுகோள்

#SriLanka #Sri Lanka President #America #Election #Election Commission #Lanka4
Mayoorikka
2 years ago
தாமதிக்காமல் உள்ளூராட்சி தேர்தலை நடத்துங்கள்: அமெரிக்க செனட் சபை இலங்கை அரசிடம் வேண்டுகோள்

இலங்கை மக்களின் குரல்கள் ஒலிக்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் ஜனநாயகத்திற்கு விரோதமானது என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு தெரிவித்துள்ளது.

டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு  இதனை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் குரல்கள் ஒலிக்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் ஜனநாயகத்திற்கு விரோதமானது இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயல் என அமெரிக்க செனெட் குழு  டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!