இந்தியாவும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற 7வது வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடலில் , பிராந்திய பாதுகாப்பு நிலைமை, பொதுவான பாதுகாப்பு சவால்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதற்கான நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு உரையாடல் புதுடில்லியில் கடந்த வாரம் நடைபெற்றது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் எஸ். கே. பத்திரன, இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்த கந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் பல்வேறு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் கூட்டு மதிப்பாய்வு, புதிய பாதுகாப்பு குறித்த வழிகள் தொடர்பில் பேசப்பட்டது.
இதேவேளை பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன புது டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் உரையாற்றினார்.
அத்துடன் இந்தியக் கடற்படையின் மேற்குக் கடற்படைக் கட்டளைத் தளபதியுடன் மும்பை கடற்படைத் தளத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



