கிரீஸில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து: பலர் உயிரிழப்பு

கிரீஸில் இரண்டு ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
ஏதென்ஸில் இருந்து டெலிஸ்லோன்கி நோக்கி பயணித்த பயணிகள் புகையிரதமும், டெலஸ்லோங்கியிலிருந்து லரிசா நோக்கி பயணித்த சரக்கு ரயிலும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
“இந்த விபத்து மிகவும் தீவிரமானதாகவும் ரயில்களின் முன் பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன” என்று நேரில் பார்த்தவர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
விபத்து காரணமாக பயணிகள் ரயிலின் 04 முன்பக்க பெட்டிகள் தடம் புரண்டதுடன், முதல் இரண்டு பெட்டிகளும் முற்றாக சேதமடைந்துள்ளன.
பயணிகள் ரயிலில் பயணித்த 250க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்பு பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்பு பணியாளர்கள் தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.






