யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள் சந்திப்பு

#sri lanka tamil news #SriLanka #Japan #Student #College Student #Tamil Student #Meeting #Lanka4
Kanimoli
2 years ago
 யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள் சந்திப்பு

 யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை 4மணியளவில் கலைப்பீட மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்பொழுது  ஜப்பானிய தூதுவராலயத்தின் அரசியல் ஆய்வாளர் ஹனா குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில் இலங்கையின் சுதந்திரதினத்தை  வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்பட்ட போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கா சார் பொதுஜன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் வடக்கு கிழக்கு தழுவிய திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், திட்டமிட்ட நிலஅபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர், மகாவலி அபவிருத்தி திட்டமும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கமும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரவை பிரச்சினைகள், தமிழ் மாணவர் சமூகத்தின் மீதான அரச அடக்குமுறைகள் என பலதரப்பட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

இதன்பொழுது ஜப்பானிய தூதுவராலய அரசியல் ஆய்வாளர் ஹனா ,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சில்வஸ்டார் ஜெல்சின்,உபதலைவர் இரா தர்ஷன்,மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!