தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தவில்லை: பொலிஸ்

#Police #Lanka4 #sri lanka tamil news #Colombo #Protest #Tamilnews
Prathees
2 years ago
தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தவில்லை: பொலிஸ்

தேசிய மக்கள் சக்தியினால் நேற்றைய தினம் நடாத்தப்பட்ட பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்திய போதிலும் பொதுக்கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டங்களில் பொலிசார் தலையிட மாட்டார்கள் என்றும், சாலையில் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.

விஹார மகாதேவி பூங்காவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்தும் லிப்டன் சுற்றுவட்டத்தில் கூட்டங்களை நடத்துவதற்கும் பொலிஸார் இடையூறு செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வீதியை மறித்து ஊர்வலம் செல்ல வேண்டாம் என தெரிவித்து பேரணியை நிறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!