ஜனாதிபதி ரணிலை சந்தித்த பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி

#Pakistan #SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #Meeting #Lanka4
Kanimoli
2 years ago
 ஜனாதிபதி ரணிலை சந்தித்த பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி

 இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Muhammad Amjad Khan Niazi) இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடல்சார் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் நடவடிக்கைகளை பரந்தளவில் மேலும் மேம்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
 
இந்த சந்திப்பை அடையாளப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.
 
பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடற்படைப் பிரதானிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!