தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள தொழிற்சங்கங்கள்!
#SriLanka
#Sri Lanka President
#strike
#Protest
#taxes
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கவும் அதற்கு முன்னதாக எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.
வருமான வரித் திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பொறியியல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட இலங்கையிலுள்ள பல நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளது.