வடக்கு மீனவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாட கோரிக்கை

வடக்கு கடலில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் இலங்கை அரசின் திட்டத்திற்கு வடக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், வடக்கு மீனவர்கள்
ஜனாதிபதி ரணிலை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் ஒன்றுகூடிப் பேச்சு நடத்தியுள்ளனர்.
குறித்த ஒன்றுகூடலில் "கடந்த பல வருடங்களாக இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாகத் தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பாக வடக்கு கடற்றொழில் சமூகம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.
நல்லாட்சிக்காலத்தில் நீங்கள் (ரணில் விக்ரமசிங்க) பிரதமராகப் பதவி வகித்தபோது, 2016ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சு மட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட பேச்சில் எட்டப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி முன்கொண்டு சென்று நிரந்தரத் தீர்வை வழங்குவீர்கள் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதி வழங்குவது தொடர்பாகக் கருத்து தெரிவித்து இருந்தார்.



