அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கலைக்கப்படுகின்றன!

#SriLanka #Sri Lanka President #Election #Election Commission #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கலைக்கப்படுகின்றன!

தேர்தல் நடக்கும் சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி நள்ளிரவுடன் நாட்டின் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கலையவுள்ளன.

இதன் பின்னர் உள்ளூராட்சி அமைச்சர் அனைத்து சபைகளுக்கும் விசேட ஆணையாளர்களை நியமிக்கவுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் வரை இவர்களின் கீழேயே அனைத்து சபைகளும் இயங்கவுள்ளன.

நாட்டின் 341 உள்ளூராட்சி சபைகளுக்கான ஆயுட்காலம் கடந்த 2022 மார்ச் 20ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்த நிலையில் உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் ஒரு வருடத்தால் அதிகரிக்கப்பட்டது.

உள்ளூராட்சி சட்டவிதிகளின்படி அமைச்சரால் ஒரு வருடத்திற்கு மட்டுமே சபைகளின் ஆயுட்காலத்தை நீடிக்க முடியும்.

இதன் பிரகாரம் ஏற்கனவே 2023 மார்ச் 20ஆம் திகதி வரை உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில், மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவாக வாய்ப்பில்லை.

இதனால், எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி நள்ளிரவுடன் கலையும், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் விசேட ஆணையாளர்களின் கீழ் செல்லவுள்ளது.

விசேட ஆணையாளர்களை உள்ளூராட்சி அமைச்சர் நியமிக்கும் நிலை தற்போது தோற்றம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!