இலங்கையின் கடன்நிலவரத்திற்கு விரைவான தீர்வை காணவேண்டும்: நிர்மலாசீத்தாராமன்

#SriLanka #India #World Bank #Finance #economy #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
இலங்கையின் கடன்நிலவரத்திற்கு விரைவான தீர்வை காணவேண்டும்: நிர்மலாசீத்தாராமன்

நடுத்தர மற்றும் குறைந்த வருமான நாடுகளின் கடன் பலவீன தன்மைக்கு தீர்வை காணவேண்டும் என  இந்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
 
பெங்களுரில் இடம்பெற்ற ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் முடிவில் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தின் அறிக்கையை வாசித்த இந்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் நடுத்தர மற்றும் குறைந்த வருமான நாடுகளின் கடன் பலவீன தன்மைக்கு தீர்வை காணவேண்டியதன் அவசரத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்நிலவரத்திற்கு விரைவான தீர்வை காண்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் கடனை விரைவில் மறுசீரமைக்கவேண்டும் என உலக வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.  நாங்கள் தீர்வுகளை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும், இலங்கைக்கு நிதி உத்தரவாதங்கள் அவசியம் என உலகவங்கியின் தலைவர் டேவிட்மல்பாஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!