இலங்கையில் விவசாய கைத்தொழில் பயிராக அவுஸ்திரேலிய அவகடோ பழம்

#Australia #Fruits #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamil #Tamilnews #Tamil People
Prabha Praneetha
2 years ago
இலங்கையில் விவசாய கைத்தொழில் பயிராக  அவுஸ்திரேலிய அவகடோ பழம்

நாட்டிற்கு டொலர்களை ஏட்டெடுப்பதர்காக HASS வகைகளை கொண்ட அவுஸ்திரேலிய வெண்ணெய் பழம் ( avacado fruit)  இலங்கையில் விவசாய கைத்தொழில் பயிராக பயிரிட விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டமான விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் குறித்த  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவகடோ பழத்திட்டத்தின் முதற்கட்டமாக பதுளை மாவட்டத்தில் 200 ஏக்கர் காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இனத்தின் மரக்கன்றுகள் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பண்டாரவளை பிரதேசத்தில் நடப்பட்டுள்ளது.

HASS அவகடோ  பழம் வகையின் சிறப்பு என்னவென்றால், பழங்கள் மற்றும் வெண்ணெய் கூழ் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியத்திற்கு உகந்த வெண்ணெய் எண்ணெய்க்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளது என்று விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பதுளை மாவட்டத்தில் விவசாயம் செய்யக்கூடிய சுமார் 1000 குடும்பங்களை தெரிவு செய்துள்ளதுடன், அவர்களுக்கு HASS வெண்ணெய் இனத்தை வளர்ப்பதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்பம், செடிகள் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்று வருடங்களில் இந்த பழத்தின் மூலம் வருமானம் ஈட்ட முடியும் மற்றும் ஒரு மரத்தில் 200 கிலோ அவகடோ பழம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!