குருந்தூர் மலைக்கு திடீர் விஜயத்தால் சிக்கிய இரகசியங்கள்

#Protest #Police #Arrest #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
குருந்தூர் மலைக்கு திடீர் விஜயத்தால் சிக்கிய இரகசியங்கள்

குருந்தூர் மலைக்கு திடீர் விஜயமொன்றினை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்டனர்.

முற்றுமுழுதான இராணுவப் பிரசன்னத்துடன் குருந்தூர் மலையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் காணப்பட்டதுடன், குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு பக்கற்றுக்களும், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்குவதற்கான கட்டில்களும், தீயில் சுடப்பட்டுக்கொண்டிருக்கின்ற குளத்துமீன்களும், ஏற்கனவே வத்தலாக்கப்பட்ட கருவாடுகளும் காணப்பட்டது.

அங்கு சீருடையில் நின்ற இராணுவத்தினர் பலர் காட்டுக்குள் தம்மை மறைத்துக்கொண்டனர்.
கட்டுமானத்திற்கான வாளி போன்ற தடையங்கள் மேற்பகுதியில் காணப்பட்டது.

தண்ணிமுறிப்பு குளத்திற்குள் ராணுவத்தை தவிர வேறுயாரும் மீன்பிடிக்கவோ குளத்திற்குள் பிரவேசிக்கவோ முடியாத நிலையில் பெருவாரியான மீனினைப்பிடித்து கருவாடாக்கி தென்பகுதிக்கு கொண்டு செல்லுகின்ற செயற்பாடுகளும் இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!