இளவாலை பனிப்புலம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல்
#Jaffna
#Police
#Arrest
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவிலிலுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.
2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்குபேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த தாக்குதலில் கார் சேதமடைந்துள்ளது.


இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக

விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




