சிறுவர் இல்லத்தில் 10 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த வார்டனின் கணவர் கைது

இரத்தினபுரி மாகாணத்தில் உள்ள பிரபல சிறுவர் இல்லமொன்றில் பத்து சிறுமிகள் தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவர் இல்லத்தின் கண்காணிப்பாளரின் கணவர் இரத்தினபுரி பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி. வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.
சிறுவர் இல்லத்தின் வார்டன் அதன் பெண்களை அவ்வப்போது தனது வீட்டில் வேலை செய்ய பயன்படுத்தியதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிறுவர் இல்லத்தில் 17 சிறுமிகள் உள்ளதாகவும், சந்தேகநபரால் ஒரு சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதை அடுத்து, மேலும் பத்து சிறுமிகள் தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சிறுவர் இல்லத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் இந்த சிறுமிகளை தங்கள் வீட்டில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
சந்தேக நபரின் கணவனால் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



