ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவு அருகே நேற்று இரவு நிலநடுக்கம்

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவு அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 10.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தின் அளவு 6 அலகுகள் மற்றும் 1 பத்தில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. எனினும், நிலநடுக்கம் காரணமாக ஜப்பான் அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை வெளியிடவில்லை.
இதேவேளை, ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்தது.

உள்ளூர் நேரப்படி 09:25 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.



