கட்டுநாயக்க பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி மற்றும் 4 பேர் கைது

#Arrest #Airport #Police #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamilnews
Prathees
2 years ago
கட்டுநாயக்க பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி மற்றும் 4 பேர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாரிய குற்றவாளி ஒருவர் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் அந்த பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட நிலைய கட்டளைத் தளபதியும் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சந்தேக நபர் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடற்படையில் இருந்து தப்பியோடிய தாம் 9 கொலைகளை செய்துள்ளதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேக நபர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.

களுத்துறை துவ  பன்சல வீதியைச் சேர்ந்த ரவிந்து வர்ண ரங்க என்ற 28 வயதுடைய நபரே பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!