அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
#Colombo
#Protest
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Tamilnews
Prathees
2 years ago
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. மாலை 3 மணியளவில் விகாரமகா தேவி பூங்காவில் நடைபெறவுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் வாக்கெடுப்பை ஒத்திவைக்கும் முயற்சி, வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி இந்த எதிர்ப்புப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
நாடு முழுவதிலுமிருந்து தனது உறுப்பினர்கள் பலர் தம்முடன் இணைவார்கள் என்றார்.