இமயமலை மலைத்தொடர் அருகே ஏற்படவுள்ள நிலநடுக்கம் குறித்து வெளியான தகவல்

#India #Earthquake #SriLanka #sri lanka tamil news #Lanka4 #Tamilnews
Prathees
2 years ago
இமயமலை மலைத்தொடர் அருகே ஏற்படவுள்ள நிலநடுக்கம் குறித்து வெளியான தகவல்

இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என புவியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்திய டெக்டோனிக் தகடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செ.மீ நகர்ந்து வருவதாகவும் இதன் காரணமாக அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மேற்கு நேபாளத்திற்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் எந்த நேரத்திலும் நில அதிர்வு நிலைகள் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இமயமலை மலைத்தொடர் அருகே ஏற்பட்டால் அதன் தாக்கம் இலங்கையிலும் உணரப்படும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்படி ஒரு நிலநடுக்கம் வருமா? இல்லை? என்று இதுவரை கூற முடியாது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவ்வாறான அதிர்ச்சியை உணர்ந்தால் சமவெளி நிலத்திற்கு வருவது மிகவும் உத்தமம் என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பலமான நிலநடுக்கம் ஏற்பட்டால் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலும் உணர முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இமயமலையில் ஏற்பட்ட 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை கொழும்பு பிரதேசமும் உணர்ந்ததாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!