கடமையை புறக்கணித்தார் சவேந்திர சில்வா...
#SriLanka
#sri lanka tamil news
#Tamil
#Tamil People
#Tamilnews
#TamilNadu President
Lanka4
2 years ago

கடந்த ஆண்டு மே மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா தவறிவிட்டார் என முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கர்னகொட தலைமையிலான மூவரடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த வசந்த கர்னகொட, தயா ரத்நாயக்க மற்றும் ரொஷான் குணதிலக்க ஆகியோர் அடங்கிய குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி கடந்த மே மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே இறுதி பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.



