பதவியிலிருந்து விலகுகின்றார் மயந்த திசாநாயக்க!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ச டி சில்வா தலைராக தெரிவு செய்யப்பட்டபோதும், ஆளும் கட்சியின் அனுசரணையில் மயந்த திசாநாயக்க தலைவராக தெரிவானார்.
இந்தநிலையில் தமது பதவி விலகலை நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலையியற்கட்டளையின் அடிப்படையில், ஹர்ச டி சில்வாவின் பெயரை எதிர்க்கட்சிகள் பரிந்;துரைத்தன.
எனினும் மயந்தவும் எதிர்க்கட்சியே என்ற அடிப்படையில் குழுவில் அதிகமாக அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியினர், அவரின் பெயரை பிரேரித்து அவரை தலைவராக்கினர்.
இதேவேளை இந்த பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு சபாநாயகர், மயந்த திசாநாயக்கவுக்கு தொலைபேசியின் ஊடாக கூறியதாக நேற்று நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தினார்.
எனினும் அதனை மறுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பை அபேவர்த்தன, மயந்த திசாநாயக்கவே தமக்கு தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டார் என்று குறிப்பி;ட்டார்.



