சஷி வீரவன்சவுக்கு உடல்நலக்குறைவு: போலி கடவுச்சீட்டு வழக்கு 4 நாட்களுக்கு ஒத்திவைப்பு

#Wimal Weerawansa #Court Order #wife #Colombo #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
சஷி வீரவன்சவுக்கு உடல்நலக்குறைவு: போலி கடவுச்சீட்டு வழக்கு 4 நாட்களுக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி  சஷி வீரவன்சவுக்கு சுகவீனம் காரணமாக 03 நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவ அறிக்கை நேற்று  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவருக்கு 03 நாட்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!