யால பூங்காவை பார்வையிடச் சென்ற மலேசிய சுற்றுலாப் பயணி மாயம்!
#SriLanka
#Yala
#National Zoo
#National Park
#Malasia
#Tourist
Mayoorikka
2 years ago

யால பூங்காவை பார்வையிடச் சென்ற மலேசிய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மலேசிய சுற்றுலாப் பயணி யால பூங்காவை பார்வையிடுவதற்காக சாரதியுடன் வண்டியில் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் மெனிக் கங்கை அருகே காரை விட்டு இறங்கி கடல் பகுதிக்கு கால்நடையாக சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காணாமல் போன இந்த சுற்றுலாப்பயணியை கண்டுபிடிப்பதற்காக கிரிந்த காவல்துறை அதிகாரிகள் குழு மற்றும் யால பலடுபன வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் குழு இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.



