இலங்கை உட்பட நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திடம் விடுத்த கோரிக்கை
#IMF
#Ukraine
#Russia
#economy
#sri lanka tamil news
Prathees
2 years ago

கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் பிணையெடுப்பு கோரியுள்ளன.
இந்தநிலையில் உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் அதிகரித்து வரும் கடன் பாதிப்புகளை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜி 20 நாடுகளின் பலதரப்பு ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோர் பெங்களூரில் நேற்று நடத்திய கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.



