பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சீனா வழங்கும் கடன்கள் குறித்து அமெரிக்கா கவலை

#China #America #Pakistan #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சீனா  வழங்கும்  கடன்கள் குறித்து  அமெரிக்கா கவலை

இந்தியாவின் உடனடி அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சீனா அளித்து வரும் கடன்கள் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா ஆழ்ந்த கவலையில் தமக்கு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலர் டொனால்ட் லூ, ராஜாங்க செயலர் ஆண்டனி பிளிங்களின் இந்திய பயணத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிளிங்கள் எதிர்வரும் மார்ச் 1 முதல் 3 வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்கு செல்கிறார்.

இந்தநிலையில் இந்தியாவை உள்ளடக்கிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கவும், எந்தவொரு வெளி பங்காளியாலும் நிர்பந்திக்கப்படக்கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்துவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டார், சீன மேம்பாட்டு வங்கியின் சபை, தமது நாட்டிற்கு 700 மில்லியன் டொலர் கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்த நிலையிலேயே அமெரிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!