கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக பிரவேசித்த 62 பேரும் விளக்கமறியலில்
#Court Order
#SriLanka
#Colombo
#Lanka4
#sri lanka tamil news
#Prison
Prathees
2 years ago

கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட 62 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்குகள் குழுவும் இதில் அங்கம் வகிக்கிறது.
ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கல்வியை மீள ஆரம்பிக்குமாறும், முன்னர் கைது செய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஆகியோரும் இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளனர்.



