இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு இராணுவ பயிற்சிகள் அதிகரிக்கப்படவுள்ளது

#India #IndianArmy #SriLanka #Sri Lankan Army #Country #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு இராணுவ பயிற்சிகள் அதிகரிக்கப்படவுள்ளது

நடப்புறவை பேணும் வகையில்  இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு இராணுவ பயிற்சிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 இந்திய – இலங்கை வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 இணை தலைவர்களான இந்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே மற்றும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் இடம்பெற்றது.

இருதரப்பு இராணுவ பயிற்சிகளை மேம்படுத்தவும் இந்து சமுத்திரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான அனுபவம் மற்றும் திறன்களை பரிமாறிக்கொள்ளவும் இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் இருதரப்பு உறவினை வலுப்படுத்த இணங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!