வேட்பு மனு தாக்கல் செய்த அரசாங்க ஊழியர்களுக்கு புதிய சிக்கல்!
#SriLanka
#Election
#Election Commission
#government
#Department
#Lanka4
Mayoorikka
2 years ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுவைச் சமர்ப்பித்த சுமார் 7,000 அரச, மற்றும் ஏனைய அரச ஊழியர்கள் தற்போது புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக நாடாளுமன்றில் இன்று தெரியவந்துள்ளது.
இந்த அரச உத்தியோகத்தர்கள் தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவாறு தெரிவித்துள்ளார்.



