விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 56,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

#SriLanka #Sri Lanka President #Paddy #Tamilnews #money #Lanka4
Mayoorikka
2 years ago
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 56,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

இந்த வருடம் விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 56,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்தத் தொகையை வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஆரம்ப செலவீனங்கள் அதிகரித்துள்ளமையினால் விவசாயிகள் எதிர்நோக்கும் சிரமங்களைப் போக்கவே இந்தத் தொகையை வழங்கத் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!