சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இலங்கையுடன் இணைந்த இந்தியா!

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன.
அத்துடன் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த சீனா தொடர்ந்து முயன்று வரும் நிலையில் இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற 7வது ஆண்டு இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தன.
இதன்போதே இருதரப்பு பயிற்சிகளை மேம்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமனே மற்றும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆகியோரின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.



