´சீதாவக்க ஒடிஸ்ஸி´ ரயில் சேவை இம் மாதம் ஆரம்பம்
#SriLanka
#sri lanka tamil news
#Tamil People
#Tamilnews
#Tamil
#Train
#Travel
#service
Prabha Praneetha
2 years ago

சீதாவக்க ஒடிஸ்ஸி´ ரயில் சேவை இம் மாதம் 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார்.
சீதாவக்க பிரதேசத்தை ஒரு புதிய சுற்றுலாத் தளமாக விரிவுபடுத்தும் நோக்குடன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் புதிய சீதாவாக்கை ஒடிஸ்ஸி ரயில் சேவையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பிக்கும் ரயிலில் 205 பயணிகள்; பயணிக்க முடியும்.
இங்கு முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கான ஒரு வழி போக்குவரத்து கட்டணம. முறையே 800.00 ரூபா, 500.00 ரூபா மற்றும் 350.00 ரூபா என்றும் ரயில்வே பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.



