2022இல் அதிக லாபத்தை ஈட்டிய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2022 இல் 6.3 பில்லியன் ரூபா நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
வரலாற்றில் ஒரு வருடத்தில் கிடைத்த அதிகூடிய நிகர லாபம் இது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஏற்பாடு செய்ததன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 4.2 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
உள்ளூர் போட்டிகளை ஏற்பாடு செய்ததன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஈட்டிய தொகை 2.27 பில்லியன் ரூபாவாகும்.
1 பில்லியன் ரூபாவும் ஈட்டப்பட்ட வருமானத்தில் பத்தில் 2 பங்கும் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்காக வழங்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது பத்து உறுப்பினர்களைக் கொண்டது.
இதன் தலைவராக நீதிபதி கே.டி.சித்ரசிறி செயற்படுகின்றார். சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் நிபுணர் குழுவின் ஆலோசனைக்கு அமைய ஏனைய சர்வதேச கிரிக்கெட் அமைப்புகளின் அரசியலமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.



