சமகி ஜன பலவேகய மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் கடும் போட்டி நிலவ வாய்ப்பு.

இலங்கை கருத்து கண்காணிப்பு ஆய்வு (SLOTS) நடாத்திய ஜனவரி 2023 கணக்கெடுப்பில்
தேசிய மக்கள் சக்தி(JVP) மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) ஆகிய கட்சிகளுக்கு பொதுத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என தெரிவித்துள்ளது.
இன்ஸ்டிடியூட் For ஹெல்த் Policy யின் (IHP) சமீபத்திய கணக்கெடுப்பின்படி, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் NPP/JVP யின் மக்கள் செல்வாக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து, பொதுத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் ஆதரவு முறையே 32% மற்றும் 31% ஆக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டு உள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை விட இவ்விரு கட்சிகளும் முன்னணியில் உள்ளனர்,
ஆனால் அவர்களுக்கிடையிலான வித்தியாசம் சிறிதளவே உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற 2022 ஜூலை முதல், SJB மூன்று புள்ளிகளையும், NPP/JVP ஒரு புள்ளியையும், UNP ஐந்து புள்ளிகளையும் பெற்றுள்ளதாக இன்ஸ்டிடியூட் For ஹெல்த் Policy பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்த மக்கள் ஆதரவு பெரும்பாலும் SLPP யின் ஆதரவாளர் இழப்பில் இருந்ததாக கணக்கெடுப்பு கூறுகிறது.. பொதுஜன பெரமுன வின் மக்கள் ஆதரவு 11 புள்ளிகள் சரிந்துள்ளது.
பொதுத் தேர்தல் வாக்களிப்பு நோக்கமானது மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்கும் அளவை மாற்றுவதாகக் கருதினால், ஜனவரி கணக்கெடுப்பு தற்போதைய நிலையில் SJB மற்றும் NPP/JVP ஆகியவை பெரும்பாலான உள்ளூராட்சிகள் மற்றும் சபைகளில் வெல்லும் என்று கூறப் படுகிறது.
இருப்பினும், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் போகலாம்
SJB மற்றும் தமிழரசு கட்சி ஆகியவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் ஆதரவை பெறும்.
IHP இன் முதன்மைப் புலனாய்வாளரும் நிர்வாக இயக்குநருமான கலாநிதி ரன்னன்-எலியா கருத்துத் தெரிவிக்கையில், “இது 2018 உள்ளாட்சித் தேர்தலில் இருந்து மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.
பொதுஜன பெரமுன வாக்குகளில் சரிவு, மற்றும் SJB யை விட ஜே.வி.பி கட்சி SLPP யில் இருந்து விலகிய வாக்காளர்களை வெல்வதிலும், அவர்களின் 2020 பொதுத் தேர்தல் வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்வதிலும் சிறப்பாகச் செயல்படுகின்றன.
NPP/JVP பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் SJB ஐ விட தெளிவான முன்னிலை பெற்றுள்ளது, ஆனால் SJB க்கு ஆதரவாளர்கள் வாக்களிக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.



