தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவு
#Court Order
#Australia
#Srilanka Cricket
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Prathees
2 years ago

அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணை நிபந்தனைகளை மாற்றுமாறு கோரி அவர் சமர்ப்பித்த மனுவைப்பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.
அதன்படி தனுஷ்க குணதிலக மீண்டும் வட்ஸ்அப் பயன்படுத்தவும் இரவில் வெளியே செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.



