48 பிக்குகளும், வசந்த முதலி உட்பட 57 பேர் கைது

#Arrest #Police #Colombo #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamilnews
Prathees
2 years ago
48 பிக்குகளும், வசந்த முதலி உட்பட 57 பேர் கைது

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தமையினால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 48 பிக்குகள் உள்ளனர்.

ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வியை மீள ஆரம்பிக்குமாறு கோரியும், முன்னர் கைது செய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறும் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று கல்வி அமைச்சுக்கு முன்பாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பிக்குகள் பேரவையினர் நேற்று ஹோமாகம பிடிபன சந்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் செய்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!