ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் - விஜயகலா சந்திப்பு! வடக்கின் நிலைவரம் குறித்தும் ஆராய்வு
#SriLanka
#Japan
#Jaffna
#Development
#economy
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் - முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்
விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து வடக்கின் நிலைவரம் குறித்தும்ஆராய்ந்தார்.
தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும் வட மாகாணத்தில் நிலைமை தொடர்பாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான திருமதி. விஜயகலா மகேஸ்வரனை ஜப்பான் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் கானா மொரிவகி நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள திருமதி. விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் வட மாகாணத்தின் தற்போதைய நிலைவரம் குறித்து ஜப்பானிய தூதரக அதிகாரி கேட்டறிந்துள்ளார்.
அவரிடம் தேசிய மற்றும் வடக்கின் அரசியல் நிலைவரம் தொடர்பாகவும் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது திருமதி. விஜயகலா மகேஸ்வரன் எடுத்துக் கூறியுள்ளார்.




