பண்டாரவளையில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விழுந்ததில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி

#SriLanka #Accident #Hospital #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
பண்டாரவளையில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விழுந்ததில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரவளை எடம்பிட்டிய வீதியின் உடமல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடமல்வத்த பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக லொறி ஒன்றின் பிரேக் செயலிழந்துள்ளது.

பின்னர் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, ​​லொறியில் 22 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். அவர்கள் காயமடைந்து பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் 11 பேர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!