நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல்
#SriLanka
#Minister
#Parliament
#Court Order
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Prasu
2 years ago

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக சட்டத்தரணிகளான பிரியலால் சிறிசேன, விஜித குமார மற்றும் இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் ஆகியோர் தாக்கல் செய்த மூன்று முறைப்பாடுகள் இன்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்தார்.



