இலங்கையில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை நிறுவ அதானி குழுமத்திற்கு அனுமதி!
#SriLanka
#India
#Hydropower
#Power station
#Power
Mayoorikka
2 years ago
இலங்கையில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை நிறுவ இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவின் அதானி நிறுவனம் இந்த இரண்டு காற்றாலைகளையும் மன்னார் மற்றும் பூநகரியில் நிறுவவுள்ளது. இதன்மூலம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் 442 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு ஆகும்.
உத்தேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் டிசெம்பர் மாதம் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதானி குழுமத்தின் அதிகாரிகளுக்கும், மின்சார அமைச்சகம், மின்சார வாரியம் மற்றும் சூரிய சக்தி ஆணைய அதிகாரிகளுக்கும் இடையே இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் மற்றும் அதன் இதுவரையிலான முன்னேற்றம் குறித்து சிறப்பு கலந்துரையாடலும் நடைபெற்றது.