இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் தேயிலை, கோப்பி தொழில்துறையை மேம்படுத்த தேசிய திட்டங்கள்

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் தேயிலை மற்றும் கோப்பி தொழில்துறையை மேம்படுத்த தனித்தனி தேசிய திட்டங்களை புதுப்பித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ட் டீ செய்தித்தளம் இதனை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தேசிய அரசாங்கம், நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள இந்தியாவின் முக்கிய மாநிலமான அஸ்ஸாமின் தேயிலைத்துறையில் கட்டமைக்கப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்கி வருகிறது.
இதன்படி புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்,பங்களாதேஷ், பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் இணைப்புத்திட்டத்தையும் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பகுதி விவசாயப் பொருட்களுக்கான உலகளாவிய சந்தையில் ஒரு பெரிய இடத்தை பெற முடியும் என்று இந்திய அரசாங்கம் கருதுகிறது.
இதேவேளை இலங்கையில் தேசிய தேயிலை மற்றும் காபி தொழில்துறைக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியில், கொழும்பை தளமாகக் கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கியை மையப்படு;த்தி முன்னெடுப்படுவதாக வேல்ட்டீ செய்தித்தளம் கூறுகிறது.
இதன்படி, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வரியை வழங்குவதே இலக்காக உள்ளதாக வேல்ட்டீ செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.



